“சுற்றுச்சூழல் சீரழிவை அரசியல் பிரச்சினை ஆக்க வேண்டும்” - ராகுல் காந்தி வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் சீரழிவை அரசியல் பிரச்சினை ஆக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிகாரம், செல்வம் மீது மனித இனம் கொண்ட வெறியால், சுற்றுச்சூழல் சீர்கேடு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்போது இந்த சீர்கேட்டை சரிசெய்யாவிட்டால், இனி எப்போதும் முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் நாம் உண்டாக்கிய பாதிப்பு, சீர்படுத்த முடியாதவை என்று விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக வெப்பமயமாதல் என்பது கட்டுக்கதை அல்ல, அது ஒரு உண்மை. சுற்றுச்சூழல் பாதிப்பால் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர், ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். ஆனால் இதை போர்க்கால அடிப்படையில் அரசு கவனிக்க மறுக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினையை அரசியல் பிரச்சினை ஆக்கும்வரை, அதற்கு முக்கியத்துவம் கிடைக்காது. ஆகவே, இந்த நாளில் அதைச்செய்ய உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story