பாகிஸ்தானில் 62 தண்ணீர் பம்பு அமைத்து கொடுத்த துபாய் இந்தியர்


பாகிஸ்தானில் 62 தண்ணீர் பம்பு அமைத்து கொடுத்த துபாய் இந்தியர்
x

துபாய் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானில் 62 தண்ணீர் பம்புகள் அமைத்து கொடுத்துள்ளார்.

பெங்களூரு,

துபாயில் வசித்து வரும் இந்திய தொழிலதிபர் ஜோகிந்தர் சிங் சலாரியா. இவர், பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பர்கர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் 62 தண்ணீர் கைபம்புகள் அமைத்து கொடுத்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. நல்ல சாலைகளே இல்லை. இதன் நிலைமை பற்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர் அறிந்தார்.

புல்வாமா தாக்குதல் காரணமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தபோதிலும், அதை பொருட்படுத்தாமல், கைபம்புகள் அமைத்து தந்துள்ளார். அந்த மக்களுக்கு தானிய மூட்டைகளையும் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story