மேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் தீ விபத்து; தீயை அணைக்க 3 மணிநேரம் தொடரும் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் ஜெகன்னாத் காட் பகுதியருகே ரசாயன குடோன் ஒன்று உள்ளது. இன்று காலை இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 25 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்றன. இதுபற்றி தீயணைப்பு வீரர் தேப்தானு போஸ் கூறும்பொழுது, தீயை அணைக்கும் பணியில் கடந்த 3 மணிநேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கட்டிடத்தின் நடுப்பகுதியில் உள்ள மேற்கூரை பகுதி தீயினால் எரிந்து விழுந்து விட்டது. கட்டிடத்தின் உள்ளே எங்களால் செல்ல முடியவில்லை என கூறியுள்ளார். இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story