டெல்லியில் எம்.பி.க்களுக்காக 36 புதிய குடியிருப்புகள் தயார்
டெல்லியில் எம்.பி.க்களுக்காக 36 புதிய குடியிருப்புகள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் புதிய எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடியிருப்பதற்காக, டெல்லியில் வடக்கு அவென்யு பகுதியில் 36 புத்தம் புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. ஜனாதிபதி மாளிகையை நோக்கி இவை அமைந்துள்ளன. பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மத்திய பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய கட்டுமானப்பணி, தற்போதுதான் முடிவடைந்துள்ளது.
ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள், 4 படுக்கையறை, மாடுலர் கிச்சன், லிப்ட், சோலார் பேனல்கள், எல்.இ.டி. விளக்குகள், அலுவலக பகுதி, அடித்தள கார் நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதிகள் அடங்கியதாக அமைந்துள்ளன. இம்மாத இறுதிக்குள் இக்குடியிருப்புகள் மக்களவை செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்பிறகு எம்.பி.க்களுக்கு இவை ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கிடையே, அதிகாரப்பூர்வ வீடுகள் ஒதுக்கப்படும்வரை, சுமார் 350 எம்.பி.க்கள் தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது.

Related Tags :
Next Story