கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்: சீனா ஒத்துழைப்பதாக ஜெய்சங்கர் தகவல்


கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்: சீனா ஒத்துழைப்பதாக ஜெய்சங்கர் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2019 12:15 AM IST (Updated: 11 Jun 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு, சீனா ஒத்துழைப்பு அளிப்பதாக ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் நடக்கும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை தொடங்கி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் லிபுலேக் வழித்தடம் வழியாக யாத்திரை தொடங்கி விட்டதாக அவர் கூறினார். இந்த யாத்திரைக்கு சீன அரசு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், இரு நாடுகளிடையிலான நட்புறவை வலுப்படுத்த இது முக்கியமான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

சீன தூதராக இருந்தபோது, தானும் இந்த யாத்திரையை மேற்கொண்டிருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். யாத்திரை செல்லும் பக்தர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Next Story