உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை


உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2019 1:00 AM IST (Updated: 13 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில், பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆக்ரா,

உத்தரபிரதேச பார் கவுன்சில் தலைவராக தர்வேஷ் யாதவ் என்ற பெண் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மாலை இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வக்கீல் அரவிந்த்குமார் மிஸ்ரா அறையில் மூத்த வக்கீல் மனீஷ் சர்மா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வக்கீல் மனீஷ் சர்மா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பார் கவுன்சில் தலைவரான தர்வேஷ்யாதவை சரமாரியாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மனிஷ்சர்மா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் காயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

Next Story