மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்


மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2019 2:39 AM IST (Updated: 13 Jun 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கவத் யாமல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் கத்தை கத்தையாக தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் மொத்தம் ரூ.1¼ கோடி இருந்தது.

இதையடுத்து காரில் இருந்த கணேஷ் கோல்கர், சமதான் நரே, அமோல் தாஸ்குட் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story