மார்க்சிஸ்ட் கட்சியுடன் இந்திய கம்யூனிஸ்டு ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம்


மார்க்சிஸ்ட் கட்சியுடன் இந்திய கம்யூனிஸ்டு ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:22 PM GMT (Updated: 13 Jun 2019 10:22 PM GMT)

திரிபுரா, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் கோலாச்சிய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தற்போது தேர்தல்களில் தோல்வியே கிடைத்து வருகிறது.

ஐதராபாத், 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களிலும் மட்டுமே வென்றது.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்திய கம்யூனிஸ்டு விருப்பம் தெரிவித்து உள்ளது. அதற்கான முயற்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி சந்தித்து இது தொடர்பாக பேசினார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தரப்பில் கூறுகையில், இரு கம்யூனிஸ்டு கட்சிகளிடையே கொள்கை அளவில் வேறுபாடு கிடையாது. இரு கட்சிகளிலும் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். எங்கள் கோரிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும் நாங்கள் தொடர்ந்து அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுப்போம் என்றனர்.


Next Story