தேசிய செய்திகள்

இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் + "||" + Pakistan talks peace in Bishkek but its fidayeens ready to bleed India

இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
இந்தியாவில் தற்கொலை பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தாலும் இந்தியா ஏற்க மறுக்கிறது.

பாகிஸ்தான் ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு காய் நகரித்தினாலும் பின்னாடி முதுகில் குத்தும் வகையில் பயங்கரவாதிகளும் தயார் நிலையில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் என உளவுத்துறை உள்ளீடுகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்ததை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை மூடியுள்ளது. இருப்பினும் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவது, இந்தியாவிற்குள் நுழைய முயற்சிப்பது தொடர்கிறது.