இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்


இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 15 Jun 2019 8:56 AM IST (Updated: 15 Jun 2019 8:56 AM IST)
t-max-icont-min-icon

இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வரும் 16 ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஜூன் 12 ஆம் தேதியே பருவமழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பு அறிவித்து இருந்தது. 

ஆனால், வாயு புயல் ஈரப்பதத்தை இழுத்துச்சென்றுவிட்டதால், மழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக  வானிலை ஆய்வு மையம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பருவமழை தாமதத்தால், தெலுங்கானாவில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. நேற்று பெரும்பாலான இடங்களில் 37 டிகிரி முதல் 42 டிகிரி வரை வெப்பம் நிலவியது.

கடலோர ஆந்திரா மற்றும் விதர்பா, சத்தீஷ்கரில் இன்று பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story