சசிகலா முன்கூட்டியே விடுதலையா? - டி.டி.வி.தினகரன் பேட்டி


சசிகலா முன்கூட்டியே விடுதலையா? - டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2019 3:45 AM IST (Updated: 18 Jun 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது குறித்து டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைக்கு சென்று சுமார் 2½ ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் 1½ ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதன்படி வருகிற 2021-ம் ஆண்டு சசிகலா உள்பட 3 பேரும் விடுதலையாக உள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது என்பது ஊருக்கே தெரியும். ஆனால் இந்த ஆட்சியை நடத்துபவர்கள் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருவதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்று செய்திகள் வெளியாயின. அதில் உண்மை இல்லை. அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

இன்று (நேற்று) சிறைக்குள், கண்காணிப்பாளரை சந்தித்தேன். அப்போது அவர், உங்கள் சித்தி, கன்னடம் நன்றாக பேசுகிறார் என்று கூறினார். இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.


Next Story