சிட் ஃபண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்கத்தில் 22 இடங்களில் சிபிஐ சோதனை
மேற்கு வங்கத்தில் சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் 22 இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் போன்சி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு சொந்தமான 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நிறுவனம் மீது மே 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்ட போன்சி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அனைத்து நிறுவனங்களையும் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
250-க்கும் மேற்பட்ட முகவர்கள் தலா சுமார் 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ததாகவும், லாபகரமான வருவாயை அளிப்பதாக உறுதியளித்த நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் இயக்குநர்களால் ஏமாற்றப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டது. டெபாசிட் தொகையை திரும்ப செலுத்தவில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story