உத்தரபிரதேசத்தில் பட அதிபர் சுட்டுக்கொலை


உத்தரபிரதேசத்தில் பட அதிபர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 2 July 2019 2:00 AM IST (Updated: 2 July 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் பட அதிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லக்னோ,

மேற்கு உத்தரபிரதேசத்தில் பிராந்திய திரைப்படங்களை தயாரித்தும், இயக்கியும் இருப்பவர் சன்சார் சிங் (வயது 70). இவர் நேற்று பாக்பத் மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான ஜிமானாவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நபரின் தந்தையை சன்சார் சிங்கின் உறவினர் கொலை செய்ததால், அதற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story