தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது - மக்களவையில், உள்துறை இணை மந்திரி பதில் + "||" + 3 killed in Pulwama attack; One is arrested - In the Lok Sabha, the Deputy Home Minister of the responds

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது - மக்களவையில், உள்துறை இணை மந்திரி பதில்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது - மக்களவையில், உள்துறை இணை மந்திரி பதில்
புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் மக்களவையில், உள்துறை இணை மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பதிலளித்து பேசியதாவது:-


புல்வாமா சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டதிலும், செயல்படுத்தியதிலும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தாக்குதலில் 5 பேர் ஈடுபட்டனர். அதில் ஒருவர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிர் இழந்தார். இதையடுத்து 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல - மத்திய அரசு பதில்
புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு பதிலளித்துள்ளது.
2. புல்வாமா தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை
புல்வாமா தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
3. பாலகோட் தாக்குதல் குறித்த மோடியின் பேச்சு: அறிக்கை கோரியது தேர்தல் ஆணையம்
பாலகோட் தாக்குதல் குறித்து தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
4. புல்வாமா தாக்குதல் குறித்து முன்பே அறிந்து இருந்த, ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நிஷார் அகமது
புல்வாமா தாக்குதல் குறித்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நிஷார் அகமது முன் கூட்டியே அறிந்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
5. புல்வாமா தாக்குதலில் புதுவகை ”சிம் கார்டு” பயன்பாடு: அமெரிக்காவின் உதவியை நாடுகிறது இந்தியா
புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அடில் தார் ”விர்ச்சுவல் சிம்” என்ற புதுவகையான சிம் கார்டினை பயன்படுத்தியதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.