அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம்: பா.ஜனதாவினருக்கு மோடி எச்சரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரியை பா.ஜனதா எம்.எல்.ஏ. கிரிக்கெட் மட்டையால் தாக்கியதை பிரதமர் மோடி கண்டித்தார். யாராக இருந்தாலும் அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்தார்.
புதுடெல்லி,
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
முன்னாள் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா, கட்சியின் செயல் தலைவர் பதவி ஏற்ற நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பாரதீய ஜனதா கட்சிக்கு தாவிய பிறகு, பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது இதுவே முதல்முறை.
கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்புக்கு வந்துள்ள நட்டா கவுரவிக்கப்பட்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் வர்கியாவின் மகனும், அதே கட்சியின் எம்.எல்.ஏ.வுமான விஜய் வர்கியா தாக்கிய விவகாரத்தை எழுப்பினார்.
சம்பவத்தை பற்றி அவர் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும்கூட, “அது யாராக இருந்தாலும், யாருடைய மகனாக இருந்தாலும், இத்தகைய அராஜகத்தையும், மோசமான நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என கண்டித்தார்.
இந்த கூட்டத்தில் கைலாஷ் வர்கியாவும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், “இத்தகைய செயல்கள் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இவை ஏற்க முடியாதவை. யாராவது தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்கும் உணர்வு வேண்டும்” என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார்.
இந்தூர் விவகாரத்தில் அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி விட்டு அதை பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. விஜய் வர்கியா நியாயப்படுத்தியதும், மன்னிப்பு கேட்க மறுத்ததும் இங்கு நினைவுகூரத்தகுந்தவை.
இந்த விவகாரத்தை பிரதமர் மோடி தீவிரமாக கவனத்தில் கொண்டதால்தான் கட்சியினரை கண்டிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த கூட்டத்துக்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி, தனது வாரணாசி தொகுதியில் 6-ந் தேதி தொடங்கி வைக்கிறார். அப்போது கட்சித்தொண்டர்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு பூத்திலும் 5 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று பிரதமர் மோடி தொண்டர்களுக்கு கூறினார்” என குறிப்பிட்டார்.
மேலும் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியபோது, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்; மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது தெரிய வரும் என்றும் குறிப்பிட்டதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
பிரதமர் மோடி வாரணாசியில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கிறபோது, கட்சித்தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, தெலுங்கானாவிலும், பிற தலைவர்கள் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொடங்கி வைப்பார்கள் என்றும் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

Related Tags :
Next Story