பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் வலைதளங்கள் முடக்கம் - பயனாளர்கள் அவதி


பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் வலைதளங்கள் முடக்கம் - பயனாளர்கள் அவதி
x
தினத்தந்தி 3 July 2019 11:17 PM IST (Updated: 3 July 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுடன் லட்சக்கணக்கான பயனாளர்கள் தொடர்பில் இருக்கின்றனர். இந்த சமூக வலைதளங்கள் ஒரு வினாடி செயலிழந்து விட்டாலே, பலகோடி பயனாளர்கள் தவிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில், புகைப்படங்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சமூக வலைதளங்களில் எதையும் டவுன்லோடு செய்ய முடியாததால் பயனாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Next Story