தனியார்மயமாக்கல் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் - ரெயில்வே மந்திரி குற்றச்சாட்டு
தனியார்மயமாக்கல் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக ரெயில்வே மந்திரி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவையில் நேற்று முன்தினம் பேசும்போது, தனது தொகுதியான ரேபரேலியில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலை உள்பட 6 ரெயில்வே உற்பத்தி கூடங்களை கம்பெனிமயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தனியார்மயமாக்கலின் முதல் படிதான் கம்பெனிமயமாக்கல் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதே குற்றச்சாட்டை தெரிவித்தார். அதற்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பது குறித்து காங்கிரஸ் அரசு 2008-ம் ஆண்டு அறிவித்தது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை ஒரு பெட்டி கூட தயாரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மட்டும் அங்கு ஆயிரத்து 422 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004-2005 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் அப்போதைய நிதி மந்திரி, பங்கு விற்பனையும், தனியார்மயமாக்கலும் பயனுள்ள பொருளாதார உத்திகள் என்று கூறினார். எனவே, தனியார்மயமாக்கல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.
ரெயில்வேயை காங்கிரஸ் அரசு தனியார்மயமாக்க முயன்றது, நாங்கள் அதை கம்பெனிமயமாக்க முயற்சிக்கிறோம்.
ரெயில்வே அச்சுக்கூடங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பணி இழக்க மாட்டார்கள். ரெயில்வேயின் வேறு துறைகளில் பணியமர்த்தப் படுவார்கள்.
ரெயில்வேயை நவீனமயமாக்கும் பணி, ஒரு தொடர் பணியாக நடந்து வருகிறது. பாரம்பரிய ரெயில் பெட்டிகள் படிப்படியாக ஒழிக்கப்படும். அவற்றுக்கு மாற்றாக ‘லிங்கி ஹாப்மன் புஸ்ச்‘ (எல்.எச்.பி.) தொழில்நுட்ப பெட்டிகள் பயன்படுத்தப்படும்.
கடந்த 2018-2019 நிதியாண்டில் இருந்து எல்.எச்.பி. பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் இவை மட்டுமே தயாரிக்கப்படும்.
தற்போது, 411 ஜோடி ரெயில்கள், எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயங்கி வருகின்றன. மேலும், ரெயில் தொழிற்சாலைகளில் அலுமினிய பெட்டிகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரெயில் விபத்துகளை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2013-2014 நிதியாண்டில் 118 ஆக இருந்த ரெயில் விபத்துகள் எண்ணிக்கை, 2018-2019 நிதியாண்டில் 59 ஆக குறைந்து விட்டது. பலியானோர் எண்ணிக்கை 152-ல் இருந்து 37 ஆக குறைந்துள்ளது. ஆகவே, 2018-2019 நிதியாண்டு, இந்திய ரெயில்வே வரலாற்றில் பாதுகாப்பான ஆண்டாகும்.
இதுதவிர, மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி ரெயில் பாதையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் அகலப்பாதை கட்டுமான பணி நடந்துவருகிறது. இதற்கான செலவு ரூ.ஆயிரத்து 182 கோடியே 31 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில், கடந்த மார்ச் மாதம்வரை ரூ.341 கோடி செலவாகி உள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.170 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி, நாட்டில், ஊழியர் இருக்கும் லெவல் கிராசிங்குகள் 21 ஆயிரத்து 340-ம், ஆளில்லா லெவல் கிராசிங்குகள் 1,048-ம் உள்ளன. ஊழியர் இருக்கும் லெவல் கிராசிங்குகளை அகற்ற சில லட்சம் கோடி ரூபாயும், சில ஆண்டுகளும் தேவைப்படும்.
இத்தகைய லெவல் கிராசிங்குக்கு பதிலாக, சுரங்கப்பாதையோ அல்லது மேம்பாலமோ கட்டப்படும். கடந்த 2018-2019 நிதியாண்டில், 3 ஆயிரத்து 479 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.

Related Tags :
Next Story