கடந்த 5 வருடங்களில் 7 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
கடந்த 5 வருடங்களில் 7 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ந்தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.
பதவி ஏற்றவுடன் அவர் 2019-20ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.
• இதில், புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு உருவாக்கும்.
• கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்பட உள்ளது.
• கல்வி மையம் ஆக உருவாகும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
• வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் படியுங்கள் திட்டம் முன்மொழியப்படும்.
• இந்திய உயர் கல்வி ஆணையத்திற்கான வரைவு கொள்கை சமர்ப்பிக்கப்படும்.
• உலக தரத்திலான கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
• விண்வெளி துறையில் புதிய சாதனைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.
• செளபாக்கியா யோஜனா, உஜூவாலா யோஜனா 2 திட்டங்களும் கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்வசதி உறுதி செய்யப்படும்.
• மீனவர்கள், மீனவ மக்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படும், கடந்த 5 வருடங்களில் 7 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
• அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.95 கோடி பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
• 2022க்குள் 1.95 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித்தரப்படும், விவசாயத் துறைக்கு மண்டல வாரியாக முன்னுரிமை வழங்கப்படும்.
• பசுமை தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
• ரெயில் நிலையங்களை நவீனமயம் ஆக்கக்கூடிய திட்டங்கள் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
Related Tags :
Next Story