டெல்லியில் கடந்த 6 மாதங்களில் 333 குழந்தைகள் மீட்பு
டெல்லியில் கடந்த ஜனவரி 1ந்தேதியில் இருந்து இதுவரை 333 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் இந்த வருடம் ஜனவரி 1ந்தேதியில் இருந்து இதுவரை 333 குழந்தைகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இவர்களில் பெருமளவிலானோர் டெல்லி நகரிலுள்ள பேருந்து நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர்.
இவர்களை தவிர்த்து டெல்லியில் கடத்தப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றி பதிவாகி உள்ள வழக்குகளின் மீது நடந்த விசாரணையில் 57 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 14 பேர் மைனர்கள் மற்றும் 37 பேர் பெண்கள். இதனை டெல்லி குற்ற பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story