தேசிய செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல் + "||" + Actress Sridevi's death was not an accident Kerala Prison DGP Trauma information

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்
கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வருமாறு:–

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் எனது நண்பர் டாக்டர் உமாதாதனிடம் அதுபற்றி கேட்டேன். பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளன. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தாலும், குளியல் தொட்டியில் உள்ள ஒரு அடி தண்ணீரில் மூழ்க முடியாது. சிலர் அழுத்தம் தராமல், ஒரு நபரின் கால்களோ அல்லது தலையோ ஒரு அடி தண்ணீரில் மூழ்காது. அது கொலையாக இருக்கலாம் என்று எனது நண்பர் கூறினார்.

இவ்வாறு டி.ஜி.பி. அதில் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24–ந் தேதி தனது கணவருடன் ஒரு திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்றபோது ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சியில் கோர விபத்து ஆம்னி பஸ் மினிலாரி மோதல்: 10 பேர் உடல் நசுங்கி பலி
கள்ளக்குறிச்சியில் ஆம்னி பஸ்-மினிலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
2. பேரணாம்பட்டு அருகே 150 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பலி
பேரணாம்பட்டு அருகே 150 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. தாராபுரம் அருகே சம்பவம்; மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தந்தையுடன் சென்ற பெண் டாக்டர் பலி
தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தந்தையுடன் சென்ற பெண் டாக்டர் பலியானார். வேகமாக வந்த வாகனம் ஏறி இறங்கியதில் இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
4. உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் 2 வாலிபர்கள் சாவு, ஆட்டோ டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். ஆட்டோ மோதியதில் வாலிபர்கள் இறந்ததாக கூறி, ஆட்டோ டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மலாடு சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் கடலில் பிணமாக மீட்பு - 20 கி.மீ. இழுத்து செல்லப்பட்ட பரிதாபம்
மலாடு சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் 20 கி.மீ. தூரத்தில் உள்ள வெர்சோவா கடலில் பிணமாக மீட்கப்பட்டார்.