சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு பதிலாக பழைய சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை
சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு பதிலாக பழைய சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரியை தி.மு.க. எம்.பி.க்கள் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, தருமபுரி செந்தில்குமார், காஞ்சீபுரம் கணேசன் செல்வம், திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை ஆகியோர் நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில், “தற்போது திட்டமிடப்பட்டுள்ள சேலம்-சென்னை 8 வழி சாலைக்கும், ஏற்கனவே சேலத்துக்கும், சென்னைக்கும் இடையே உள்ள 3 நெடுஞ்சாலைகளுக்கும் வெறும் 40 கி.மீ. மட்டுமே பயணதூரம் வித்தியாசம். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவழித்து, விளைநிலங்களை சீரழிப்பது ஏற்புடையது அல்ல. எனவே, ஏற்கனவே உள்ள 3 சாலைகளை விளைநிலங்கள், பொதுமக்களின் சொத்துகளுக்கு பாதிப்பில்லாமல் விரிவாக்கம் செய்ய வேண்டுகிறோம்“ என்று கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story