தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பையில் கைது


தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பையில் கைது
x
தினத்தந்தி 18 July 2019 8:01 AM GMT (Updated: 2019-07-18T13:31:25+05:30)

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

நிழல் உலக தாதா  தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் காஷ்கரின் மகன் ரைஸ்வான் காஸ்கர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிக்கும் போது, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு ரிஸ்வான் காஸ்கர் கைது செய்யப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் ரிஸ்வான் காஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான்,  மும்பை போலீசார் தாவூத் இப்ராகீம் கும்பலைச் சேர்ந்த பாஹிம்  என்பவரது நெருங்கிய நண்பரான அகமது ராஸா என்பவரை கைது செய்தனர்.

அகமது ராஸாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் ரிஸ்வான் காஸ்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.  அப்போது கிடைத்த தகவலின் பேரில், மும்பை விமான நிலையத்தில் ரிஸ்வான் காஸ்கரை நேற்று இரவு போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story