மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்


மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்
x
தினத்தந்தி 18 July 2019 10:49 AM GMT (Updated: 2019-07-18T16:19:46+05:30)

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சகோதரர் ஆனந்த் குமாரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லி அருகே நொய்டாவில் 7 ஏக்கர் பரப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனந்த் குமாரை சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக மாயாவதி நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பினாமி சொத்து தொடர்பான விசாரணையின் போது சொத்து தொடர்பான தகவல்கள் வெளியாகி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story