நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கர்நாடக ஆளுநர் விடுத்த காலக்கெடு நிறைவு


நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கர்நாடக ஆளுநர் விடுத்த காலக்கெடு நிறைவு
x
தினத்தந்தி 19 July 2019 8:15 AM GMT (Updated: 19 July 2019 8:15 AM GMT)

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் விதித்த கெடு முடிந்த போதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

பெங்களூரு,

கர்நாடக அரசியலில் உச்சக் கட்ட குழப்பம் நிலவும் நிலையில், இன்று நண்பகல் 1.30 மணிக்குள் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர்  வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில், கர்நாடக சட்டப்பேரவையில் 2-வது நாளாக நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. 

நண்பகல் 1.30 மணியை தாண்டிய போதிலும் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை. ஆளுநர் விதித்த கெடு முடிந்த பிறகும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் கூறும் போது, விவாதம் முடியும் முன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது” என்றார். 

Next Story