"டிக் டாக்", "ஹலோ'" செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்


டிக் டாக், ஹலோ செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
x
தினத்தந்தி 19 July 2019 10:31 AM GMT (Updated: 19 July 2019 10:31 AM GMT)

'டிக் டாக்', 'ஹலோ' ஆகிய செயலிகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள்  தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பி இருந்தது. 

அதன்பேரில், டிக் டாக், ஹலோ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பியுள்ள அமைச்சகம் அந்த கேள்விகளுக்கு 22-ம் தேதிக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செயலிகள் தேசவிரோத செயல்பாடுகளுக்கு  பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன எனவும் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

Next Story