ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் போலீஸ் அதிர்ச்சி


ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் போலீஸ் அதிர்ச்சி
x
தினத்தந்தி 19 July 2019 11:40 AM GMT (Updated: 2019-07-19T17:10:31+05:30)

டெல்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு அடுத்தப்படியாக உலகம் முழுவதும் போதைப்பொருட்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் பெரும் நகரங்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் எல்லையின் வழியாக இந்தியாவிற்கு அதிகளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது. இதனால் எல்லையில் தீவிர கண்காணிப்பு தொடர்கிறது. டெல்லியிலும் போதைப்பொருட்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பறிமுதலும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் சிறப்புப் படை போலீஸ் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் சுமார் 150 கிலோ எடையிலான ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய சர்வதேச மதிப்பு ரூ. 600 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டவர் உள்பட 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெருமளவு போதைப்பொருள் பறிமுதல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Next Story