பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்


பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்
x
தினத்தந்தி 19 July 2019 11:17 PM IST (Updated: 19 July 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக இந்திய வெளியுறவு பணி அதிகாரி (ஐ.எப்.எஸ்) விவேக் குமாா் இன்று நியமிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு, பிரதமர்  அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வரும் விவேக் குமாரை பிரதமரின் தனிச் செயலாளராக தேர்வு செய்துள்ளது. விவேக் குமார், கடந்த 2004-ம் ஆண்டு பிரிவான இந்திய அயலகப் பணித்துறையின் அதிகாரியாக தேர்வானவர்.

விவேக் குமாா் பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை அவா் அந்தப் பொறுப்பில் தொடா்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story