உ.பி. முதல்-மந்திரி உருவபொம்மை எரிப்பு


உ.பி. முதல்-மந்திரி உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 20 July 2019 8:00 PM GMT (Updated: 20 July 2019 7:22 PM GMT)

உத்திரபிரதேச முதல்-மந்திரியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

சிம்லா,

உத்தரபிரதேச மாநிலத்தில் நிலத்தகராறில் பழங்குடியின விவசாயிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், இமாசலபிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உருவபொம்மையை அவர்கள் தீ வைத்து எரித்தனர்.


Next Story