ஜம்மு காஷ்மீர் ஆளுநருடன் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சந்திப்பு


ஜம்மு காஷ்மீர் ஆளுநருடன் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சந்திப்பு
x
தினத்தந்தி 3 Aug 2019 12:24 PM IST (Updated: 3 Aug 2019 12:24 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்து பேசினார்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால்,  மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது.   

தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில்  காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.  இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாக தகவல்கள் பரவுகின்றன. கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஸ்ரீநகரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.  இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உமர் அப்துல்லா ஆளுநரை சந்தித்து பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. நண்பகல் 1 மணிக்கு உமர் அப்துல்லா செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 

Next Story