காஷ்மீரில் நீண்டநேர துப்பாக்கி சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் - ஒரு வீரரும் பலியானார்
காஷ்மீரில் நடந்த நீண்டநேர துப்பாக்கி சண்டையில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு வீரரும் பலியானார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் பண்டுஷன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அதிரடிப்படை வீரர்கள், மத்திய போலீஸ் படையினர் இணைந்த கூட்டுப்படையினர் வெள்ளிக்கிழமை அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதில் வீரர்கள் ராம்பிர், தீபக் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் ராம்பிர் பரிதாபமாக இறந்தார்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஜீனத்துல் இஸ்லாம் என்பவர் கொல்லப்பட்டார். அவர் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அங்கிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியில் நேற்று காலையும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது மன்சூர் அகமது பட் என்ற ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த பகுதியில் சுமார் 30 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதேபோல பாரமுல்லா மாவட்டம் வார்போரா பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

Related Tags :
Next Story