காஷ்மீருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமித்ஷா ஆலோசனை
காஷ்மீருக்கு எழுந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் ராணுவப்படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், அமர்நாத் யாத்திரை பக்தர்கள் உடனடியாக வெளியேறுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அவ்வப்போது பரபரப்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அங்கு நிலவு சூழ்நிலை தொடர்பாக தெளிவற்ற நிலையே தொடர்கிறது. இந்நிலையில் காஷ்மீருக்கு எழுந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் ஒரு மணிநேரமாக இருவரும் ஆலோசனையை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பதட்டம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள அம்மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாலை 6 மணியளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story