உ.பி. அரசு பஸ்களில் ‘அவசர உதவி பொத்தான்’கள்


உ.பி. அரசு பஸ்களில் ‘அவசர உதவி பொத்தான்’கள்
x
தினத்தந்தி 8 Aug 2019 1:03 AM IST (Updated: 8 Aug 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

உ.பி. மாநிலத்தில் உள்ள அரசு பஸ்களில் அவசர உதவி பொத்தான்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

மத்திய அரசின் ‘நிர்பயா’ திட்டத்தின்படி அனைத்து அரசு பஸ்களிலும் நவீன முறையில் வழிகாட்டும் ஜி.பி.எஸ். கருவிகளுடன், அவசரகால பொத்தான்களும் பொருத்தப்படுகின்றன. இதற்காக ரூ.15 கோடி செலவிடப்படும் என்று உ.பி. மாநில சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராஜ்சேகர் தெரிவித்தார்.

மேலும் ‘டயல்100’ (அவசர உதவி போலீஸ்) திட்டத்துடன் இந்த புதிய முறை இணைக்கப்படுவதால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பஸ் பயணத்தின் போது பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அவசர கால உதவி பொத்தானை அழுத்தினால் போதும். அவசர போலீஸ் மற்றும் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான உதவி கிடைக்கும்.

Next Story