தலைப்பில் குடியரசு தினம் என தவறான அறிவிப்பு; டெல்லி போலீசுக்கு எதிராக வழக்கு
டெல்லி போலீசார் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக குடியரசு தினம் என தவறாக அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் வருகிற 15ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சுதந்திர தினத்தில் போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி டெல்லி போலீசின் தெற்கு மாவட்ட பிரிவு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
எனினும் அதன் தலைப்பில், சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக குடியரசு தினம் என தவறாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்து டெல்லியை சேர்ந்த மன்ஜீத் சிங் சக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். அவரது மனுவில், இதுபோன்ற மனித தவறுகள், டெல்லி போலீசார் வெளியிட்ட அறிவிப்புகளை மூத்த அதிகாரிகள் படித்து, சரிசெய்யவில்லை என காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story