கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஜாமினை எதிர்க்கும் அரசின் மனு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி


கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஜாமினை எதிர்க்கும் அரசின் மனு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி
x
தினத்தந்தி 14 Aug 2019 12:32 AM IST (Updated: 14 Aug 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஜாமினை எதிர்த்த கேரளா அரசின் மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொச்சி,

குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒரு பத்திரிகையாளரின் மரணத்திற்கு காரணமானவர் என கூறப்பட்டு, பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று  தள்ளுபடி செய்தது.

முன்னதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீராம் வெங்கிடராமன், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து, மாநில அரசு, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 7ம் தேதி இந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்தது. மேலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ரத்த மாதிரியை உடனடியாக எடுத்து சோதனை செய்யாததற்கும், மருத்துவ பரிசோதனையில், அவர் குடிபோதையில் இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜாமினை ரத்து செய்யக் கோரும், மாநில அரசின் மனுவை, கேரள உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.


Next Story