பரிதாபாத் துணை ஆணையர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


பரிதாபாத் துணை ஆணையர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Aug 2019 5:49 AM GMT (Updated: 14 Aug 2019 5:49 AM GMT)

பரிதாபாத் துணை ஆணையர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரிதாபாத்,

பரிதாபாத் துணை ஆணையர் விக்ரம் கபூர் தன்னுடைய வீட்டில் தனது சர்வீஸ்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அந்த பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் கபூர் பரிதாபாத்தில் உள்ள புதிய  தொழில்துறை நகரத்தின் பொறுப்பாளராக இருந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பரிதாபாத் போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி சுபே சிங்  கூறும்போது...

விக்ரம் கபூர் தனது சர்வீஸ் ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை  செய்து கொண்டது வேதனை அளிப்பதாக உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கபட்டு வருகிறது என கூறினார்.

Next Story