ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ராகுல் காந்தி கடிதம்


ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ராகுல் காந்தி கடிதம்
x
தினத்தந்தி 14 Aug 2019 9:44 PM GMT (Updated: 2019-08-15T03:14:09+05:30)

பயிர்க்கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி, அங்கு சேத பகுதிகளை நேரில் பார்த்தார். இந்நிலையில், அவர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்து சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர்கள் நாசமானதாலும், உடைமைகள் அழிந்ததாலும், பணப்பயிர்களின் விலை வீழ்ச்சி அடைந்ததாலும் விவசாயிகள் தாங்கள் வாங்கிய பயிர்க்கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். வங்கிகளின் கெடுபிடியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகவே, பயிர்க்கடனை திரும்ப செலுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story