தேசிய செய்திகள்

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு + "||" + Moderate earthquake in Gujarat - Record 4.2 on the Richter Scale

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
குஜராத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.
காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பாச்சு என்ற இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் வடமேற்கு பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.


கட்ச் மாவட்டம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த மாதம் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி
குஜராத்தில் விநாயகர் சிலை கரைத்தபோது ஆற்றில் மூழ்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
2. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்
குஜராத் மாநிலம் வதோதராவில் மழை வெள்ளத்தின் போது நகருக்குள் புகுந்த 52 முதலைகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
3. குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா
குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
4. வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றிலிருந்து 452 உலோகங்கள் நீக்கம்
ஆமதாபாத்தில் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றிலிருந்து 452 உலோகப்பொருட்கள் நீக்கப்பட்டுள்ளது, மருத்துவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. குஜராத்தில் கனமழை: வீடு மற்றும் சுவர் இடிந்து 8 பேர் பலி
குஜராத்தில் கனமழை காரணமாக, வீடு மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர்.