உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு


உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 2:04 PM GMT (Updated: 2019-08-21T19:34:51+05:30)

உத்தரப் பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில், மின்னல் தாக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பண்டா, 

உத்தரப் பிரதேசத்தில் சித்ரகூட் மாவட்டத்தின் கண்டேஹா கிராமத்தில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற உதவு ராஜ் (13), புஷ்பேந்திரா (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக போலீசார்  தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக அருகிலிருந்த சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள்  மருத்துவமணைக்கு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார், மேலும், அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வட்ட அலுவலர் இஷ்டியாக் அகமது தெரிவித்தார். 


Next Story