தேசிய செய்திகள்

இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது: மன்மோகன் சிங் + "||" + India's economic condition is worrisome: Manmohan Singh

இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது: மன்மோகன் சிங்

இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது: மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ”இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது” என்றும், ”மோடி அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ள முறையற்ற நிர்வாகமே இந்த மந்தநிலைக்கு காரணம்” என ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்,  ”கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத வீழ்ச்சி விகிதமும், உற்பத்தி துறையின் வளர்ச்சி 0.6 சதவீதமாக நிலையில்லாமல் இருப்பதும் , இந்தியா நீண்டகாலமாக மந்தநிலையில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. இனிமேலும், இதே சூழ்நிலையில் இந்தியாவால் தொடந்து நீடிக்க முடியாது. ஆனாலும், இந்தியா மிக விரைவான விகிதத்தில் வளரக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. அவசரமாக செயல்படுத்தப்பட்ட பணமதிப்பு குறைப்பு மற்றும் ஜிஎஸ்டியின் தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது.  இதனால் முதலீட்டாளர்களின் எண்ணங்களும் மந்தமான நிலையில் உள்ளன, இவை பொருளாதார மீட்சிக்கான அடித்தளங்கள் அல்ல. ஆகவே, செயற்கையாக உருவாக்கப்பட்ட நெருக்கடியிலிருந்து நமது பொருளாதாரத்தை மீட்பதற்காக, பழிதீர்க்கும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, விவேகத்துடனும், சிந்தனையுடனும் நடக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்று  மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை நிர்ணயித்தது வங்காளதேசம்
இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை வங்காளதேச அணி நிர்ணயித்துள்ளது.
2. வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது
மழை மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்றிரவு நடக்கிறது.
3. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை எனத்தகவல்
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
4. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாக சாடியது.
5. இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் 'மஹா' புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு
‘மஹா புயல்’ காரணமாக இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.