ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 2 Sept 2019 4:51 PM IST (Updated: 2 Sept 2019 5:44 PM IST)
t-max-icont-min-icon

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 21 ஆம் தேதி கைது செய்த சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய இருந்த  நிலையில், இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.  

ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் முறையிடப்பட்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ப. சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது. 


Next Story