மேற்கு வங்காளத்தில் டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் சாவு
மேற்கு வங்காளத்தில் டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் கங்கராம்பூர் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் விவசாய கருவியான கலப்பை ஏற்றப்பட்டு இருந்தது.
நள்ளிரவில் அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே போலீஸ் நண்பர்கள் 3 பேர் பலியானார்கள். மேலும் டீ குடிக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக கங்கராம்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மால்டா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் மற்றும் கிளனர் ஆகியோர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story