வாரணாசியில் பிரதமர் மோடி, பிறந்தநாள் கொண்டாடுகிறார்


வாரணாசியில் பிரதமர் மோடி, பிறந்தநாள் கொண்டாடுகிறார்
x
தினத்தந்தி 3 Sept 2019 3:11 AM IST (Updated: 3 Sept 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

வாரணாசியில் பிரதமர் மோடி, தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 17-ந்தேதி 69-வது பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்தநாளை தனது சொந்த தொகுதியான வாரணாசியில் மோடி கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரது தற்காலிக நிகழ்ச்சி நிரல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 2 நாள் பயணமாக, 17-ந்தேதி பிற்பகலில் மோடி வாரணாசிக்கு செல்கிறார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை சந்திக்கிறார்.

மறுநாள் (18-ந்தேதி), பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஜனசங்க தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். உபாத்யாயா பெயரில் நிறுவப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். மேலும், நகரின் முதலாவது பன்னடுக்கு வாகன நிறுத்தத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

அத்துடன், ‘பிட் இந்தியா’ திட்டப்படி, வாரணாசியில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story