உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்குப்பதிவு


உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 3 Sept 2019 12:58 PM IST (Updated: 3 Sept 2019 12:58 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முசாபர்நகர்,  

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் சுஜ்ரு கிராமத்தில் வசிக்கும் அப்தாப் என்பவர், வரதட்சணை தராததால் தனது மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்தாப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோட்வாலி காவல் நிலைய அதிகாரி அனில் கபர்வன் தெரிவித்தார்.

இது குறித்து காவல்துறையினர் அளித்த கூற்றுப்படி, அப்தாப் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி அவரது பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். மேலும், அவரது மனைவி வரதட்சணை தர மறுத்ததை தொடர்ந்து அவருக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்யவும் முயற்சித்தார். இதையடுத்து அப்தாப் மீதும் அவரது  குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்தாப்பிற்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story