20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை வழங்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா


20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை வழங்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
தினத்தந்தி 3 Sept 2019 8:41 PM IST (Updated: 3 Sept 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு  அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், வதந்திகள் பரவி வன்முறை வெடிக்காமல் இருக்க அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  படிப்படியாக அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் சூழலில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை,  ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் சந்தித்தனர். 

டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,  உள்துறை இணையமைச்சர   நித்யானந்த் ராய் மற்றும்  உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, இன்னும் 20 முதல் 25 நாட்களுக்குள் காஷ்மீர் முழுவதும் செல்போன் சேவை மற்றும் இணையசேவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என பஞ்சாயத்து தலைவர்களிடம் அமித் ஷா உறுதி அளித்தார்.  மேலும், பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அமித்ஷா உறுதி அளித்தார். 

Next Story