உடல்நலக்குறைவு காரணமாக அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி


உடல்நலக்குறைவு காரணமாக அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 3 Sept 2019 11:59 PM IST (Updated: 3 Sept 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவு காரணமாக அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புனே,

காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரேக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மராட்டிய மாநிலம் புனே, சிரூர் தாலுகாவில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அன்னா ஹசாரேவின் நெருங்கிய உதவியாளர் கூறியதாவது:-

சளி காரணமாக, அவருக்கு நெஞ்சு பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இருமல் மற்றும் உடல் பலவீனம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை, அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓய்வு எடுக்க அன்னா ஹசாரேயை டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story