லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஒப்புதல் வாக்குமூல வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்
லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தானியர்களை கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி இந்திய ராணுவம் கைது செய்தது. அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூல வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.
ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத சதியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கோடு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் காரணமாக பாகிஸ்தானின் முயற்சி வெற்றிபெற வில்லை. பாகிஸ்தானில் இருந்து தீவரவாதிகள் தொடர்ந்து ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு இராணுவத்தின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான் ஸ்ரீநகரில் இன்று நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
பாகிஸ்தானில் இருந்து ஒவ்வொரு நாளும் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் லஷ்கருடன் தொடர்புடையவர்கள் என கூறினார்.
பின்னர் பயங்கரவாதிகளின் வாக்குமூல வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில் பயங்கரவாதிகள் எங்கெல்லாம் தாக்குதல் நடத்துவது, எப்படி நடத்துவது என்பது குறித்து கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story