ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பை சொன்ன எம்எல்ஏ அல்கா லம்பா


ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பை சொன்ன எம்எல்ஏ அல்கா லம்பா
x
தினத்தந்தி 6 Sept 2019 12:23 PM IST (Updated: 6 Sept 2019 1:01 PM IST)
t-max-icont-min-icon

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

டெல்லி மாநிலத்தின் சாந்தினி சவுக் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா ஆம்  ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இன்று தனது ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சியில் கடந்த 6 வருட பயணம் முடிவுக்கு வருவதாகவும் அல்கா லம்பா அறிவித்து உள்ளார். கடந்த 6 வருட பயணம் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது அனைவருக்கும்  நன்றி, என கூறி உள்ளார்.

லம்பா கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தியை சந்தித்தார், இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்ற ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது.




Next Story