சந்திரயான்-2 தரையிறங்குவதில் பின்னடைவு -பாகிஸ்தான் மந்திரி கிண்டல்
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிரங்குவதற்குள் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதை பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பகத் உசேன் கிண்டல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து வந்த சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
எனினும் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் ட்விட்டரில் #INDIAFAILED என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானியர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பகத் உசேன், இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய நெட்டிசன்கள் பலர் உசேனை விமர்சித்துப் பதிவிட்டனர்.
இதற்கு உசேன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-2 தோல்விக்கு நான் தான் காரணம் என்பது போல் இந்தியர்கள் என்னை கிண்டல் செய்வதைக் கண்டு ஆச்சரியமாக உள்ளது என்று பதிவிட்டு 'இந்தியா தோற்றுவிட்டது' என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் மந்தியின் மகிழ்ச்சி குறித்து காங்கிரசின் சல்மான் அனீஸ் சோஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளை உங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரால் பாராட்ட முடியாவிட்டால், அவர் பாகிஸ்தானுக்கு என்ன செய்ய முடியும்?
இந்தியாவின் விக்ரம் லேண்டர் குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்து பாகிஸ்தானை வெட்கப்படுத்துகிறார். அவர் சில ட்விட்களால் பலன் பெறலாம் ஆனால் பாகிஸ்தான் இன்னும் பலவற்றை இழக்கிறது என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story