பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: இஸ்ரோ


பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: இஸ்ரோ
x
தினத்தந்தி 7 Sept 2019 7:50 PM IST (Updated: 7 Sept 2019 7:50 PM IST)
t-max-icont-min-icon

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

சந்திரயான்-2 திட்டம் கடைசி கட்டத்தில் பின்னடைவை சந்தித்தது.  இந்த நிலையில், இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- “தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்  சந்திரயான் 2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவீத பணிகளை எட்டிவிட்டோம். 

முந்தைய திட்டங்களை ஒப்பிடும் போது சந்திரயான்- 2 வில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை பெற்றிருக்கிறோம். சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து அதன் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகள் உற்று நோக்கி கொண்டு இருந்தன. நிலவின் சுற்று வட்டப்பாதையில் திட்டமிட்டபடி ஆர்பிட்டர்  சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆர்பிட்டர் மூலம்,  நிலவை பற்றி ஆய்வு செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story