நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் புகைப்படம் கிடைக்க வாய்ப்பு - இஸ்ரோ அதிகாரி தகவல்
நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் புகைப்படம் கிடைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கும் முன், கடைசி நேரத்தில் அதனுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் என்ன ஆனது? என்று தெரியவில்லை. என்றாலும் ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தொடர்ந்து சுற்றி வருகிறது. அது ஓர் ஆண்டு காலம் சுற்றி வந்து நிலவை பற்றி தகவல்களை அனுப்பும். அதன் ஆயுள் காலம் மேலும் நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆர்பிட்டரில் ஆய்வு கருவிகளும், துல்லியமாக படம் எடுக்கும் மிகவும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கிறது. லேண்டர் தரை இறங்க நிர்ணயிக்கப்பட்டு இருந்த இடத்துக்கு மேலே ஆர்பிட்டர் வரும் போது அதில் உள்ள சக்திவாய்ந்த கேமரா அந்த இடத்தை படம் எடுத்து அனுப்பும் என்றும், அப்படி புகைப்படம் எடுக்கும் போது விக்ரம் லேண்டரின் படத்தையும் எடுக்கக்கூடும் என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சந்திரயான்-2 திட்டம் 90 முதல் 95 சதவீதம் வெற்றி பெற்று இருப்பதாகவும், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் தென்துருவ பகுதியை ஆய்வு செய்து பயனுள்ள தகவல்களை அனுப்பும் என்றும் தெரிவித்தார்.
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருகிறது. பூமியை விட மெதுவாக சுற்றுவதால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்கு சமம். சந்திரனின் தென்துருவம் சூரிய ஒளி படாத பகுதியாக இருப்பதால் அங்கு தண்ணீர் அதிக அளவில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆர்பிட்டர் எடுத்து அனுப்பும் புகைப்படங்கள் மூலம் இதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

Related Tags :
Next Story